ETV Bharat / state

திருவள்ளூர் மாவட்டத்தில் ஓர் ரியல் சேவல் 'ஆடுகளம்' - ஏராளமான பேட்டைக்காரர்கள் பங்கேற்பு - பொங்கல் பண்டிகை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உயர் நீதிமன்ற சிறப்பு அனுமதியுடன் திருவள்ளூர் அடுத்த தங்கானூர் கிராமத்தில் சேவல் சண்டை தொடங்கியது. வெற்றுக்காலுடனான சேவல் சண்டையின் முதல் நாளான இன்று 300-க்கும் மேற்பட்ட சேவல்கள் பங்கேற்றுள்ளன.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jan 20, 2023, 10:37 PM IST

பிரமாண்டமாக நடைபெற்ற சேவல் சண்டை

திருவள்ளூர்: தமிழ்நாட்டில் வீர விளையாட்டாக சிறப்பு பெற்ற சேவல் சண்டையில், சூதாட்டம் நடைபெறுவதாக எழுந்த புகார்களால் இப்போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. திருவள்ளூர் அடுத்த தங்கானூரில் கடந்த 25 ஆண்டுகளாக சேவல் போட்டிகள் நடைபெற்று வருவதால், இந்த ஆண்டும் கிராம மக்களின் பொழுது போக்கு மட்டுமின்றி மனதுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தவும் சேவல் சண்டை போட்டிக்கு சிறப்பு அனுமதி வழங்க வேண்டும் என்று போட்டி ஏற்பாட்டாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தனர்.

இது குறித்து விசாரணை நடத்திய நீதிமன்றம் சேவல் சண்டைக்கு சிறப்பு அனுமதி கொடுத்தது. இதனையடுத்து தங்கானூர் பகுதியில் வெற்றுக்காலுடனான சேவல் சண்டை போட்டிகள் இன்று (ஜன.20) தொடங்கின. இதில் பங்கேற்க சேவல் வளர்ப்போர் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் களத்தில் குவிந்துள்ளனர்.

போட்டியில் பங்கேற்க வந்தவர்கள் சேவல் சண்டை போட்டி நிர்வாகத்திடம் 500 ரூபாய் செலுத்தி, தங்கள் பெயரை பதிவு செய்துக்கொண்டு சேவல் வகைகள், எடையினைப் பொறுத்து சேவல் மோதலுக்கு அனுமதிக்கப்பட்டது. குறிப்பாக சேவலின் தலையில் இருக்கும் பூவை பொறுத்து குருவிப்பூ சேவல், மத்தாப்பூ சேவல், தவக்களைப்பூ சேவல், கத்திப்பூ சேவல், ஊசிப்பூ சேவல் ஆகிய வகைகளும் இதேபோல் வெள்ளைக்கால், பேய்கருப்பு, பசுப்புக்கால், பூதக்கால், முகைக்கால், கருங்கால் ஆகிய வகைகள் என பிரித்து சேவல் சண்டை போட்டிக்கு விடப்படுகின்றது.

போட்டியில் பங்கேற்கும் சேவல்களை ஒருமணி நேரத்தில் முதல் 20 நிமிடங்கள் களத்தில் இறக்கிவிட்டு மோத விடுகின்றனர். அடுத்த 20 நிமிடங்கள் ஓய்வும், பிறகு மீண்டும் களத்தில் இறக்கியும் சேவலை மோதவிடுகின்றனர். சேவல்கள் மோதிக்கொள்ளும்போது வட்டத்தை தாண்டி வெளியில் சென்றாலோ அல்லது மண்ணை தொட்டாலோ அந்த சேவல் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்படும். போட்டிக்குத் தயார் செய்த சேவல்களுடன் ஏராளமானோர் தங்கானூர் கிராமத்தில் குவிந்து தங்கள் சேவல்களை மோதவிடுகின்றனர்.

இன்று முதல் 3 நாட்கள் இந்தப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த சேவல் சண்டை போட்டிகளைப் பார்த்து ரசிக்க ஏராளமானோர் தங்கானூர் கிராமத்தில் குவிந்து வருவதால் சேவல் போட்டி களைகட்டி வருகின்றது. 3 நாட்கள் நடைபெறும் இந்தப் போட்டியில் முதல் பரிசு பெறும் சேவல் உரிமையாளருக்கு 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான இருசக்கர வாகனமும், இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் சேவல் உரிமையாளருக்கு ஒரு லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனமும் பரிசாக வழங்கப்படும் என போட்டி ஏற்பட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: வீடியோ: திருச்சி நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.