திருவள்ளூர் மாவட்டம் பெரிய மாங்காடு பகுதியில் நான்கு கோடியே 38 லட்சத்து 57ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு அரசு மீன் இறங்குதளத்தினை அமைத்துள்ளது.
பழவேற்காடு ஏரியின் கரையில் 300 படகுகள் நிறுத்திவைக்ககூடிய வசதியுடன் அமைந்துள்ள இந்த இறங்குதளத்தில் மீன் உலர் தளம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் இந்த இறங்குதளம் நேற்று காணொலி காட்சி மூலம் திறந்துவைக்கப்பட்டது.
இதன்பின்னர் பொன்னேரி சட்டப்பேரவை உறுப்பினர் பலராமன், மீன்வளத் துறை அலுவலர்களுடன் சென்று இறங்கு தளத்தில் உள்ள உலர் கூடம், வலை பின்னும் இடம் ஆகியவற்றை பார்வையிட்டார்.
இதையும் படிங்க: +2 வரை படித்துவிட்டு மூன்று ஆண்டுகள் மருத்துவராகப் பணிபுரிந்த பெண் கைது!