ETV Bharat / state

'அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருக்கும் மக்களை குற்றவாளிகளாக சித்தரிக்கும் போக்கை கைவிடவேண்டும்' - Demonstration at Thiruvallur District

அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருக்கும் மக்களை குற்றவாளிகளாக சித்தரிக்கும் போக்கை கைவிடவேண்டும் என்பன உள்ளிட்டப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியூ சார்பில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிஐடியு ஆர்ப்பாட்டம்
சிஐடியு ஆர்ப்பாட்டம்
author img

By

Published : Aug 1, 2022, 4:57 PM IST

திருவள்ளூர் : மத்திய அரசைக் கண்டித்து சிஐடியூ நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்துவதன் ஒருபகுதியாக, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஆக.1) மாவட்ட சிஐடியூ சார்பில் கண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் பணிபுரியும் 50 கோடிக்கும் மேலான மக்களுக்கு ஆண்டுக்கு 200 நாள்கள் வேலையும், ரூ.600 கூலியும் வழங்கவேண்டும்; உழைப்பின் சக்தியை உற்பத்தியாக மாற்றிடத்தேவையான கட்டமைப்பை உருவாக்கத்தேவையான நிதியை ஒதுக்கிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும், வழக்கமான வேலை நேரத்தில் 9 மணிக்கு மேல் பதிவேற்றம் செய்ய உத்தரவிடவும் வேலைத்தளத்திற்கு தேவையான குடிதண்ணீர், மருந்துப்பெட்டி, நிழல் பந்தல் ஆகியவைகளை உத்தரவாதப்படுத்தும் ஊராட்சியில் எல்லா நாட்களிலும் வேலை நடப்பது உறுதி செய்திட வேண்டுமென்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

மேலும், ஆர்ப்பாட்டத்தில்,

  • ’தாமதம் இன்றி சம்பளம் வழங்கிட வேண்டும்
  • வேலைத்தளத்தில் உயிரிழப்பு இருந்தால் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும்
  • ரேஷன் திட்டத்தை பலப்படுத்த வேண்டும்
  • அரசு கொள்முதலை அதிகப்படுத்த வேண்டும்
  • உணவுப்பொருள் மீதான ஜிஎஸ்டி வரியினை முற்றிலும் கைவிட வேண்டும்
  • தாழ்த்தப்பட்ட, பழங்குடி மற்றும் விவசாயத்தொழிலாளர்களுக்கு வாழத்தகுதியான வீட்டுமனை வழங்கப்படுவதையும் அடிப்படை சட்டமாக்க வேண்டும்
    சிஐடியூ ஆர்ப்பாட்டம்
  • ஆட்சிப் பணிக்குரிய அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருக்கும் மக்களை குற்றவாளிகளாக சித்தரிக்கும் போக்கை கைவிட வேண்டும்
  • அரசு தார்மீகப்பொறுப்பேற்று அராஜகமான நில வெளியேற்றத்தைத் தடுத்து நிறுத்தவேண்டும்
  • வீட்டு மனையும் நிலமும் வழங்க வேண்டும்’ என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இதையும் படிங்க: செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணிகளின் தொடர் வெற்றி: பயிற்சியாளரின் பிரத்யேக பேட்டி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.