இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர், “CAA, NPR, NRC ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும் என நாடு முழுவதும் இஸ்லாமியர்கள், எதிர்க்கட்சிகள், பல்வேறு அமைப்பினர் போராடி வருகின்றனர். தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவது குறித்து 1947இல் மகாத்மா காந்தி, 1950இல் நேரு, 1957இல் கம்யூனிஸ்ட் கட்சியினர், 1964இல் காங்கிரஸ் கட்சியினர் பேசிவந்துள்ளனர். ஆனால் யாரும் நடைமுறைப்படுத்தவில்லை.
2014ஆம் ஆண்டு பிரதமர் மோடி இந்தச் சட்டத்தை அமல்படுத்தப்போவதாக தேர்தல் வாக்குறுதியளித்தார். அதன்படி இந்தச்சட்டத்தை அமல்படுத்தியுள்ளார். ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து அகதிகளாக இந்தியாவிற்கு வந்த சிறுபான்மையின இந்துக்கள், பரிசேயர்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்டோர் ஆறு ஆண்டுகள் இங்கு தங்கியிருந்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்க சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சட்டத்தால் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள். இதை பாரதப் பிரதமரும் உள்துறை அமைச்சரும் உறுதிபடுத்தியுள்ளனர். இருப்பினும் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் சுயலாபத்திற்காகவும், வாக்குக்காகவும் மக்களிடையே பொய் பிரசாரத்தை பரப்பி போராட்டத்தைத் தூண்டுகின்றனர்.
தேசிய குடிமக்கள் பதிவேடு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை கணக்கெடுப்பு செய்யப்படுகிறது. அதற்கு யாரும் எந்த ஆவணங்களையும் காட்ட வேண்டிய அவசியமில்லை. அதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார். இந்த சந்திப்பில் பாஜக மாவட்டத் தலைவர் ராஜ்குமார், மாவட்ட பொறுப்பாளர் லோகநாதன், மாவட்ட பொதுச்செயலாளர் அஸ்வின்குமார் கருணாகரன், நகரத்தலைவர் சதீஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வரும் 16ஆம் தேதி முழக்க போராட்டம்!