ETV Bharat / state

திருவள்ளூரில் குடிமராமத்துப் பணிகள் ஆய்வு செய்த தலைமைப் பொறியாளர் தனபால்! - Chief Engineer dhanabal inspection lake

திருவள்ளூர்: தமிழ்நாடு முதலமைச்சர் திருவள்ளூரில் தொடங்கி வைத்த ஏரிகளின் குடி மராமத்துப் பணிகளை பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் தனபால் நேற்று ஆய்வு செய்தார்.

திருவள்ளூர் குடிமராமத்து பணி ஆய்வு  திருவள்ளூர் மாவட்டச் செய்திகள்  Chief Engineer inspect the thiruvallur district lake under kudimaramathu work  Chief Engineer dhanabal inspection lake  thiruvallur district news
திருவள்ளூரில் குடிமராமத்து பணிகள் ஆய்வு செய்த தலைமை பொறியாளர் தனபால்
author img

By

Published : Nov 29, 2019, 10:19 AM IST

திருவள்ளூர் மாவட்டத்தில் குடிமராமத்துப் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சில வாரங்களுக்கு முன் தொடங்கி வைத்தார். ஏரி, குளங்களை அந்தந்தப்பகுதியில் உள்ள விவசாயிகளே குடிமராமத்துத் திட்டத்தின் கீழ், தூர்வாரி வந்த நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த மழையால் அந்தப் பணிகள் நிறுத்தப்பட்டன.

இந்தச்சூழ்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் கல்பாக்கம், வயலூர், வேலூர் ஏரிகளை பொதுப்பணித்துறையின் வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி கட்டமைப்பு அமைப்பின் தலைமை பொறியாளர் தனபால் ஆய்வு செய்தார். அப்போது, அவருடன் செயற்பொறியாளர் ஜெயகுமாரி மற்றும் உதவி செயற்பொறியாளர் முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

முன்னதாக வயலூர் ஏரியை ஆய்வு செய்த தலைமை பொறியாளர் தனபால் அங்கு விவசாயத்திற்காக முறையான அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த, டீசல் இன்ஜின்களை அப்புறப்படுத்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். பின்னர் ஏரிக் கரைகளை பலப்படுத்தும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

திருவள்ளூரில் குடிமராமத்துப் பணிகள் ஆய்வு செய்த தலைமைப் பொறியாளர் தனபால்

பின்பு ஏரிக்கரையின் மீது மாடுகள் நுழையாதவாறு போடப்பட்ட தடுப்புகளை பொதுப்பணித்துறையினர் அகற்றினர். இதைத்தொடர்ந்து அப்பகுதி விவசாயிகளிடம் குடிமராமத்துப் பணிகள் எவ்வாறு நடக்கின்றன என்பது குறித்து கேட்டறிந்தார்.

இதையும் படிங்க: கொடைக்கானல் நட்சத்திர ஏரியை உருவாக்கியவரின் 200ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்!

Intro:தமிழக முதல்வர் தொடங்கி வைத்த ஏரிகளின் குடி மராமத்து பணிகளை திருவள்ளூரில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தனபால் ஆய்வு செய்தார்.

Body:திருவள்ளூர் மாவட்டத்தில் குடி மராமத்து பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.ஏரிகள் மற்றும் குளங்களை விவசாயிகளே தூர்வாரும் அந்த பணிகள் நடைபெற்று வந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையில் ஏரிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது.அதனால் குடிமராமத்து பணிகள் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்தநிலையில் திருவள்ளூர் மாவட்டம் கல்பாக்கம்,வயலூர்,வேலூர் ஏரிகளை பொதுப்பணித்துறையின் வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி கட்டமைப்பு அமைப்பின் தலைமை பொறியாளர் தனபால் ஆய்வு செய்தார். அப்போது அவருடன் செயற்பொறியாளர் ஜெயகுமாரி மற்றும் உதவி செயற்பொறியாளர் முருகன் ஆகியோர் உடன் ஆய்வு செய்தனர். முன்னதாக வயலூர் ஏரியை ஆய்வு செய்த தலைமை பொறியாளர் தனபால் அங்கு விவசாயத்திற்காக முறையான அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த டீசல் எஞ்சின்களை அப்புறப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் ஏறி கரைகளை பலப்படுத்தும் பணிகள் குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார். பின்பு ஏரிக்கரையின் மீது மாடுகள் நுழையாதவாறு போடப்பட்ட தடுப்புகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அப்புறப்படுத்தினர். இதைத் தொடர்ந்து அங்கிருந்த விவசாயிகளிடம் குடிமராமத்து பணிகள் எவ்வாறு நடக்கிறது என்றும்,அதில் குறைபாடுகள் இருந்தால் சுட்டிக்காட்டவும் என பொறியாளர் தனபால் கேட்டுக்கொண்டார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.