திருவள்ளூர்: 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லப்புரத்தில் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெறுகிறது. இதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு தலைமைச் செயலாளர் மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு துறை முதன்மை செயலாளர் காணொளி காட்சி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு விழிப்புணர்வு நடத்துவதற்கு அறிவுரை வழங்கப்பட்டது.
அதன்படி இன்று (ஜூலை 15) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதல் வட்டாட்சியர் அலுவலகம் திரும்பி மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை 5 கி. மீட்டர் தூரத்திற்கு செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஒலிம்பியாட் மாரத்தான் போட்டியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் என 150-க்கும் மேற்பட்டோர் இந்த ஒலிம்பியாட் மாரத்தான் போட்டியில் பங்கேற்றனர். மேலும் இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்கள்
ஆண்கள் பிரிவில் ஏபிஎஸ் பள்ளியைச் சேர்ந்த மாணவன் எஸ்.வருண் முதலிடத்தையும், டி.ஆர்.பி.சி.சி.சி இந்து மேல்நிலைப்பள்ளி மாணவன் கே.தினேஷ்குமார் 2-ஆம் இடத்தையும், பூண்டி அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவன் ஜெ.ஹரிஹரன் 3-ஆம் இடத்தையும் பிடித்து சாதனை படைத்தனர்.
அதேபோல் பெண்கள் பிரிவில் எம்ஜிஆர் யூனிவர்சிட்டி மாணவி கே.எம்.காயத்திரி முதல் இடத்தையும், கிரைஸ்ட் கிங்க் பள்ளி மாணவி மதுஸ்ரீ 2- ஆம் இடத்தையும், சவீதா யூனிவர்சிட்டி மாணவி சஞ்சனாஸ்ரீ 3-ஆம் இடத்தையும் பிடித்து சாதனை படைத்தனர்.
இந்த ஒலிம்பியாட் விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் அருணா கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பிரச்சார் இன்டர்நெட் எத்திராஜ், ஸ்போர்ட்ஸ் அகாடமி தீபன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள், பயிற்றுனர்கள் என அனைவரும் பங்கேற்றனர்.
இதையும் படிங்க:18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசம்!