ETV Bharat / state

ஏரியை உடைக்க முயன்ற மாநகராட்சி ஊழியர்கள் - தடுத்து நிறுத்திய மக்கள்! - latest news on chennai

திருவள்ளூர்: கொரட்டூர் ஏரியின் கால்வாயை உடைத்துக் கழிவு நீரை திறந்து விட மாநகராட்சி ஊழியர்கள் முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

chennai corporation
author img

By

Published : Sep 19, 2019, 5:39 PM IST

சென்னை அருகே உள்ள கொரட்டூர் ஏரியை சுற்றுலாத் தளமாக மாற்ற கடந்த ஆறு ஆண்டுகளாக பணிகள் நடைபெற்று வருகின்றன. அருகிலுள்ள அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலை மற்றும் ஆவின் பால்பண்ணையிலிருந்து வெளியேறும் கழிவு நீர் கலந்து வந்தது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் தொடர்ந்த வழக்கில், ஏரியில் எந்தவொரு கழிவு நீரும் கலக்கக் கூடாது என பசுமை தீர்ப்பாயம் உத்தரவு வழங்கியது. இந்நிலையில் நேற்றிரவு சென்னையில் பெய்த கன மழையால் அருகிலிருந்த குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனை அகற்ற சென்னை மாநகராட்சி ஊழியர்கள் காவல்துறை உதவியுடன் கொரட்டூர் ஏரியின் கரையை உடைக்க முயற்சி செய்தனர்.

ஏரியை உடைக்க முயன்ற மாநகராட்சி ஊழியர்கள்

இதனை அறிந்த கொரட்டூர் ஏரி பாதுகாப்பு மக்கள் இயக்கம் மற்றும் பொதுமக்கள் மாநகராட்சி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மாநகராட்சி அதிகாரிகள் தேங்கியிருந்த மழை நீரை டேங்கர் லாரியில் எடுத்துச்சென்றனர். கால்வாய்களை தூர்வாராமல் ஏரியை உடைக்க சென்னை மாநகராட்சி ஊழியர்கள் முயல்வதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர்

இதையும் படிக்கலாமே: 'உதயநிதி ஸ்டாலினால் மண்சட்டி சுமக்க முடியுமா?' - ஜான் பாண்டியன் கேள்வி

Intro:கொரட்டூர் ஏரியின் கால்வாயை உடைத்து கழிவு நீரை திறந்து விட மாநகராட்சி அதிகாரிகள் முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.Body:கொரட்டூர் ஏரியின் கால்வாயை உடைத்து கழிவு நீரை திறந்து விட மாநகராட்சி அதிகாரிகள் முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை அருகே  உள்ளது கொரட்டூர் ஏரி.இந்த ஏரியை சுற்றுலா தளமாக மாற்ற  கடந்த 6 ஆண்டுகளாக பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு அம்பத்தூர் தொழிற்பேட்டை உள்ள தொழிற்சாலை மற்றும் அம்பத்தூர்  ஆவின் பால்பண்ணையில் இருந்து வெளியேரும் கழிவு நீர்  கலந்து வந்தது. இதனால் கொரட்டூர் சுற்றுவட்டார  பகுதியில் நிலத்தடி நீர் கழிவு நீர் கலந்து மாசு ஏற்பட்டது.இதனை அடுத்து கொரட்டூர் ஏரியில் கழிவு நீர் கலப்பதை கண்டித்து அப்பகுதி மக்கள் பல்வேறு கட்ட போராட்டத்தை நடத்தியதோடு தேசிய  பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இதனை தொடர்ந்து கொரட்டூர் ஏரியில் எந்தவொரு கழிவு நீரும் கலக்க கூடாது என பசுமை தீர்ப்பாயம் உத்தரவு வழங்கியுள்ளது.இந்த நிலையில் நேற்று அவு   சென்னை மற்றும் புறநகர்  பகுதியில் பெய்த கன மழையால்  அம்பத்தூர், கருக்கு , டிடிபி  காலனி போன்ற பகுதிகளில் மழை நீருடன் கழிவு நீர் கலந்து குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளது.இதனை அகற்ற சென்னை மாநகராட்சி அதிகாரிகள் காவல்துறை உதவியுடன்  கொரட்டூர் ஏரியின் கரை உடைக்க முயற்சி செய்தனர்.இதனை அறிந்த கொரட்டூர் ஏரி பாதுகாப்பு மக்கள் இயக்கம்  மற்றும்  பொதுமக்கள்  மாநகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனால் மாநகராட்சி அதிகாரிகள் தேங்கிருந்த மழை நீரை டேங்கர் லாரியில் எடுத்து வருகின்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,கழிவு நீர் செல்லும் கால்வாய்களை தூர்வாரத காரணத்தால் கழிவு நீர் தேங்கி வருகிறது. கால்வாய்களை தூர்வாரமல் ஏரியை உடைக்க சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சட்டவிரோதமாக கரையை உடைத்து கழிவு நீரை ஏரியில் விடப்பார்கின்றனர்  என குற்றம்சாட்டினர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.