ETV Bharat / state

பசுமையை காக்க 2,250 மரக்கன்றுகள் நட்டு அசத்திய கல்லூரி மாணவர்கள்!

author img

By

Published : Nov 16, 2019, 8:49 AM IST

திருவள்ளூர்: பூவிருந்தவல்லி அருகே தனியார் பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் 2 ஆயிரத்து 250 மாணவர்கள் ஒரேநேரத்தில் 2 ஆயிரத்து 250 மரக்கன்றுகளை நட்டு அசத்தியுள்ளனர்.

Chennai 2250 college students planting 2250 trees

பூவிருந்தவல்லியை அடுத்த தண்டலத்திலுள்ள சவீதா பல்கலைக்கழக வளாகத்தில் மரம் நடும் விழா நடைபெற்றது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் நடைபெற்ற இந்த மரம் நடும் விழாவில் சவீதா பல்கலைக்கழக வேந்தர் வீரையன் தலைமை தாங்கினார்.

இதில் மருத்துவம், பொறியியல், சட்டம், கலை அறிவியல் மற்றும் பள்ளி மாணவர்கள் என மொத்தம் இரண்டாயிரத்து 250 மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இதில் உள்ளூர் பழ வகையான மா, பலா, சீதா, பாதம், சப்போட்டா என 600 பழவகை மரங்களும் 300 பூ பூக்கும் மரங்கள், மலைவேம்பு உள்ளிட்ட மருத்துவம் நிறைந்த மரங்கள் என இரண்டாயிரத்து 250 மரக்கன்றுகள் நடப்பட்டன.

திருவள்ளூரில் 2,250 மரக்கன்றுகள் நடும் விழா

இது குறித்து மாணவர்கள் கூறுகையில், "சுற்றுச்சூழல் தூய்மையாக இருக்க மரங்கள் பெரிதும் பயன்படுகின்றன. மரங்கள் குறைந்து வருவதால்தான் காற்று மாசு போன்ற சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது.

மாணவர்களாகிய நாங்கள் அனைவரும் ஒன்றுகூடி மரக்கன்றுகள் வைத்தது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அதனை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வளர்ப்போம்" எனக் கூறினர்.

இதையும் படிக்க: போரூர் ஏரியில் நடப்பட்ட 1200 மரக்கன்றுகள் - களம்கண்ட இளைஞர்கள்!

Intro:பூவிருந்தவல்லி அருகே தனியார் பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் 2250 மாணவர்கள் ஒரே நேரத்தில் 2250 மரக்கன்றுகளை நட்டு வைத்து அசத்தியுள்ளனர்

Body:பூவிருந்தவல்லி அடுத்த தண்டலத்தில் உள்ள சவீதா பல்கலைக்கழக வளாகத்தில் மரம் நடும் விழா நடைபெற்றது.சுற்றுச்சூழலை பாதுக்காக்கும் வகையில் நடைபெற்ற இந்த மரம் நடும் விழாவில் சவீதா பல்கலைக்கழக வேந்தர் வீரையன் தலைமையில் மருத்துவம், பொறியியல் ,சட்டம்,கலை மற்றும் அறிவியல் மற்றும் பள்ளி மாணவர்கள் என மொத்தம் 2250 மாணவர்கள் ஒன்றாக கலந்து கொண்டனர்.இதில் உள்ளூர் பழ வகையான மா,பலா,சிதா,பாதம்,சப்போட்டா என 600 பழ வகை மரங்களும் 300 பூக்கும் மரங்கள்,மல வேம்பு உள்ளிட்ட மருத்துவம் நிறைந்த மரங்கள் உள்ளிட்ட 2250 மரக்கன்றுகள் நடப்பட்டது.Conclusion:இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில் சுற்றுசூழல் தூய்மையான இருக்க மரங்கள் பெரிதும் பயன் படுகின்றன.மரங்கள் குறைந்துவருவதால்தான் காற்று மாசு போன்ற சுற்றுசூழல் பாதிப்பு ஏற்படுகிறது.மாணவர்கள் ஒன்றுகூடி மர கன்றுகள் வைத்தது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது அதனை தங்கள் தொடர்ந்து கண்காணித்து வளர்ப்போம் என கூறினார்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.