திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே இளம் பெண்ணிடம் செயின் பறித்த இளைஞர் ஒருவரைப் பொதுமக்கள் பிடித்து அடித்து உதைத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் சோழபுரம் அருகே இளம் பெண்ணிடம் செயினைப் பறித்து விட்டுச் சென்றுள்ளனர்.
அதனைப்பார்த்த அவ்வழியே வந்த இளைஞர் ஒருவர், வழிப்பறி கொள்ளையர்களைப் பிடிக்க முயற்சிக்கும் போது அவரைத் தலையில் தாக்கிவிட்டு ஒருவர் தப்பிவிட்டார். மற்றொருவரை அப்பகுதியிலிருந்த பொதுமக்கள் மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்து சோழவரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.