திருவள்ளூர்: திருத்தணி கேசிசி பேங்க் தெருவில் வசிப்பவர் சரவணன். இவர் சென்னையில் அரசு போக்குவரத்து கழக நடத்துனராக பணிபுரிகிறார்.
இவரது மனைவி பாரதி (48), நேற்று (அக்.23) திருத்தணி அக்கையநாயுடு சாலையிலுள்ள அம்மன் கோயிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்திருந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் பாரதி கழுத்திலிருந்த நான்கு சவரன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்தத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கஞ்சா விற்பனை; நண்பரைக் கொலை செய்த 4 பேர் சரண்!