ETV Bharat / state

நாட்டில் எத்தனை பேர் போதைப் பொருட்களை பயன்படுத்துகின்றனர்? - வெளியான அதிர்ச்சியூட்டும் பதில்! - சர்வதேச போதைப் பொருள் கடத்தல்காரர்கள்

நாட்டில் 7 கோடி பேர் போதைப் பொருட்களை பயன்படுத்துவதாக மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மண்டல இயக்குநர் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.

தனியார் பள்ளி விழாவில் கலந்து கொண்ட மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மண்டல இயக்குநர் அரவிந்தன்

author img

By

Published : Jul 11, 2023, 11:04 AM IST

தனியார் பள்ளி விழாவில் கலந்து கொண்ட மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மண்டல இயக்குநர் அரவிந்தன்

திருவள்ளூர்: திருவள்ளூர் நகர் பகுதியில் அமைந்து உள்ள தனியார் பள்ளியில் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மண்டல இயக்குநர் (Central Narcotics Control Division Regional Director) அரவிந்தன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அரவிந்தன் பின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “நாட்டில் 7 கோடி பேர் போதைப் பொருட்களை பயன்படுத்துகிறார்கள். போதைப் பொருள் நாம் நாட்டின் மீது செலுத்துப்படும் போர். கடந்த 2019ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இந்திய நாட்டில் 7 கோடி போர் போதைப் பொருள் பயன்படுத்துகிறார்கள் என தெரிய வந்தது. அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் போதைப் பொருட்களை இந்தியாவில் கொண்டு வந்து நாட்டை அழிக்க நினைக்கிறார்கள்.

போதைப் பழக்கத்தைத் தடுக்க தினந்தோறும் காலை, மாலை என இரு வேளையும் யோகா பயிற்சி மற்றும் உடற்பயிற்சி போன்ற உடலுக்கு ஆரோக்கியமான விளையாட்டுகளை மேற்கொள்ள வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், போதைப் பழக்கத்திலிருந்து தடுக்க ஆசிரியர்கள் மூலமாக விழிப்புணர்வு மேற்கொள்ள அறிவுறுத்தி வருகிறோம்.

பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் காவல் துறையிடம் தொடர்ந்து நட்பு வைத்திருந்தால் மாணவர்கள் மத்தியில் உள்ள போதைப் பொருட்கள் நடமாட்டத்தை குறைக்க முடியும். பள்ளி, கல்லூரி அருகே போதைப் பொருட்கள் விற்பவர்களுக்கான கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன. அத்தகைய சட்டங்களைப் பயன்படுத்தி போதைப் பொருட்கள் புழக்கத்தைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறோம்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “இந்தியாவில் கிடைக்கக் கூடிய போதைப் பொருட்கள் 80 முதல் 85 சதவீதம் வரை கடல் வழியாகவே கடத்தி வரப்பட்டு வருகிறது. ஆப்கானிஸ்தானில் இருந்து கடல் வழியாக ஹெராயின் என்ற போதைப் பொருட்கள் அதிகமாக கடத்தி வரப்பட்டு வருகிறது. கடல் வழியாக கடத்தி வரப்பட்ட சுமார் 2,500 கிலோ எடை உள்ள போதைப் பொருட்கள் கடந்த மாதம் கேரள மாநிலம் கொச்சியில் பறிமுதல் செய்தோம்.

மேலும், சர்வதேச போதைப் பொருள் கடத்தல்காரர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். கடல் வழியாக போதைப் பொருட்கள் கடத்தி வருவதைத் தடுக்க சோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஐடி நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள், மருத்துவர்கள் இடையே போதைப் பழக்கத்தை தடுக்க விழிப்புணர்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு மூலமாக இதுவரை 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் 10 ஆயிரம் கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 40 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்” என கூறினார்.

இதையும் படிங்க: ஓடும் பேருந்தில் பிட்பாக்கெட்; 7 சவரன் நகையைத் திருடிய ஆந்திராவைச் சேர்ந்த ரஜினிக்கு அடி உதை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.