திருவள்ளூர் மாவட்டம், அதிகத்தூர் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி விநாயகம்-நிஷாந்தி. இவர்களின் ஏழு வயது மகன் அவினாஷ். இரவு குளியலறையிலுள்ள வாட்டர் ஹீட்டரை ஆன் செய்ய மகன் அவினாஷிடம் நிஷாந்தி சொல்லியதாகக் கூறப்படுகிறது.
அவினாஷ்க்கு வாட்டர் ஹீட்டர் சுவிட்ச் ஆன் செய்வதற்கு உயரம் எட்டாததால், பாத்திரத்தின் மேல் நின்று ஹீட்டருக்கான சுவிட்ச்சை ஆன் செய்ய சிறுவன் முயன்றான். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில், வாட்டர் ஹீட்டரின் வயர் மீது அவினாஷ் உடல் பட்டதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கடம்பத்தூர் காவல்துறையினர், இறந்து கிடந்த சிறுவனின் சடலத்தை மீட்டு, திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். ஏழு வயது சிறுவன் மின்சாரம் பாய்ந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: போபாலில் 300 படுக்கைகள் கொண்ட 20 ரயில் பெட்டிகள்தனிமைப்படுத்தும் மையமாக மாற்றம்!