திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த தடபெரும்பாக்கம் பகுதியில் இன்று (அக்.24) காலை கழிவுநீர் கால்வாயில் இறந்த நிலையில் ஆண் சடலம் இருப்பதாக பொன்னேரி காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர், சடலத்தை கைப்பற்றி உடற்கூறாவிற்காக பொன்னேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், "வேம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் (42). மின்சார வாரியத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார்" என்பது தெரியவந்தது.
மேலும் அவர் கழிவு நீர் கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்தாரா? அல்லது யாரேனும் கொலை செய்து விட்டு சென்றார்களா? என்பது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சாலை விபத்தின்போது பாம்பு கடித்ததை அறியாத பெண் உயிரிழப்பு!