ETV Bharat / state

லாரி மோதிய விபத்தில் இருவர் பலி! - two died

திருவள்ளூர்: செங்குன்றத்தில் இருசக்கர வாகனங்கள் மீது லாரி மோதிய விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

செங்குன்றத்தில் சாலை விபத்து
author img

By

Published : Mar 28, 2019, 12:57 PM IST

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அடுத்த பாலவாயல் சந்திப்பு பகுதியில் சென்ற இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது அதிவேகத்தில் வந்த லாரி கட்டுபாட்டை இழந்து மோதியது. இதில் இருசக்கர வாகனங்களில் சென்று கொண்டிருந்த இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், காயமடைந்தவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர்.

செங்குன்றத்தில் நடந்த சாலை விபத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

பின்னர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த மாதவரம் காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டதில், லாரி கட்டுபாட்டை இழந்து இருசக்கர வாகனங்கள் மீது மோதியிருப்பதும், இதில் ஆவடி அடுத்த பஞ்செட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜான்சன் மற்றும் ஆவடியை சேர்ந்த சந்திரபாபு ஆகிய இருவர் உயிரிழந்திருப்பதும், சுஜித் என்பவர் காயமடைந்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் விபத்திற்கு காரணமான லாரி டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சாலை விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Intro:செங்குன்றத்தில் பின்னால் வந்த லாரி இருசக்கர வாகனம் மீது மோதி விபத்தில் இருவர் உயிரிழப்பு ஒருவர் காயம் லாரி ஓட்டுநர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.

Body:திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே அடுத்தடுத்து இரு சக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர். செங்குன்றம் அருகே பாலவாயல் சந்திப்பில் அசுர வேகத்தில் வந்த லாரி முன்னால் சென்று கொண்டிருந்த இருவேறு இரு சக்கர வாகனங்களின் மீது மோதியது. இதில் தமது மகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த பஞ்செட்டி கிராமத்தை சேர்ந்த ஜான்சன் என்பவரும் மற்றொரு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஆவடியை சேர்ந்த சந்திர பாபு என்பவர் உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மாதவரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் வந்து சுஜித் லேசான காயமடைந்தார். இந்த விபத்தில் படுகாயமடைந்த லாரி ஓட்டுநரை போலீஸார் மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மகனின் கண்ணெதிரே தந்தை விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Conclusion:மகனின் கண்ணெதிரே தந்தை விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.