தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள 526 ஊராட்சிகளுக்கு சுமார் 7 கோடி ரூபாய் செலவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களை, அண்மையில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பா. பெஞ்சமின் வழங்கினார்.
இதைத் தொடர்ந்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்ட பேட்டரி வாகனத்தை தற்போது அந்தந்த பகுதி தலைவர்கள் தொடங்கி வைத்து, தூய்மைப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடம்பத்தூர் ஊராட்சியில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள மூன்று பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட்டன. அந்த வாகனத்தை கடம்பத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி ரமேஷ் தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் துணைத் தலைவர் ஜெயக்குமார், ஊராட்சி செயலாளர் பிரகாஷ் , வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.