ETV Bharat / state

திருவள்ளூரில் தேசிய சட்டப்பணிகள் தின விழிப்புணர்வு பேரணி

author img

By

Published : Nov 9, 2022, 10:21 PM IST

தேசிய சட்டப் பணிகள் தினத்தையொட்டி, திருவள்ளூரில் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி தலைமையில் நடந்த பேரணியில் வழக்கறிஞர்கள், சட்ட கல்லூரி மாணவர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

Etv Bharat
Etv Bharat

திருவள்ளூர்: தேசிய சட்டப் பணிகள் தினத்தை முன்னிட்டு, திருவள்ளூரில் நடந்த தேசிய சட்டப் பணிகள் தின பேரணியை மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி இன்று (நவ.9) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின் பேரில் ஒவ்வொரு ஆண்டும் நவ.9ஆம் தேதி சட்டப்பணிகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் தேசிய சட்டப் பணிகள் தின பேரணி நடைபெற்றது.

இந்தப் பேரணியை மாவட்ட முதன்மை நீதிபதி செல்வ சுந்தரி கொடியசைத்து தொடங்கி வைத்தார். திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தொடங்கிய பேரணியானது, எம்.ஜி.ஆர் சிலை வரை சென்று மீண்டும் நீதிமன்றத்தை வந்தடைந்தது. இந்த பேரணியில் 200-க்கும் மேற்பட்ட சட்ட கல்லூரி மாணவர்கள் 'பேணுவோம்..பேணுவோம்.. சமூக நீதி பேணுவோம்.. இலவசம்.. இலவசம்.. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சட்ட உதவி இலவசம்.. அரசு திட்டங்கள் கிடைக்கவில்லை.. அணுகிடுங்கள் சட்ட உதவி மையத்தை அணுகிடுக..' என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாக சென்றனர்.

திருவள்ளூரில் தேசிய சட்டப் பணிகள் தின பேரணி..

இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதிகள், அரசு வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள், சட்டக் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் காவல் துறையினர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: 'தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக்கேட்பு' - ஆளுநர் தமிழிசை பகீர் புகார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.