தமிழ்நாடு அரசு கடந்த ஜூன் 28ஆம் தேதி 61 ஐபிஎஸ் அதிகாரிகளை பணிமாற்றம் செய்து உத்தரவிட்டது. இதில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பதவி வகித்த பொன்னி, லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்பி-ஆக மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து அவரது இடத்திற்கு சென்னை பூக்கடைப் பகுதி துணை காவல் ஆணையராக இருந்த அரவிந்தன் ஐபிஎஸ், மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து அவர் இன்று பதவியேற்றுக் கொண்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்த அவரை மாவட்ட காவல்துறை அலுவலர்கள் வரவேற்றனர்.