ETV Bharat / state

திருவள்ளூர் நகராட்சியில் மருந்து தெளிக்கும் பணி தீவிரம்!

திருவள்ளூர்: கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நகராட்சி ஆணையர் சந்தானம் உத்தரவின் பேரில் திருவள்ளூர் நகராட்சி சார்பில் கிருமிநாசினி தெளக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருவள்ளூர் நகராட்சியில் மருந்து தெளிக்கும் பணி தீவிரம்  திருவள்ளூர் மாவட்டச் செய்திகள்  Antiseptic spry work going in thiruvallur district  thiruvallur news
திருவள்ளூர் நகராட்சியில் மருந்து தெளிக்கும் பணி தீவிரம்
author img

By

Published : Mar 26, 2020, 8:43 PM IST

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியதையடுத்து மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தேவையற்ற வகையில் வெளியே வருவதை தவிர்க்கவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் கரோனா பரவலைத்தடுக்கும் வகையில் மாவட்ட எல்லைகள் மூடப்பட்டு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

திருவள்ளூர் நகராட்சியில் மருந்து தெளிக்கும் பணி தீவிரம்

அதேபோல், திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சந்தானம் உத்தரவின் பேரில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பஜார் வீதி, ராஜாஜி தெரு, வடக்கு ராஜ வீதி தேரடி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சாலையோரக் கடைகள் மற்றும் வீடுகளின் மீது கிருமிநாசினியை தெளித்து வருகின்றனர். மேலும், இதுபோன்ற பணிகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என நகராட்சி ஆணையர் சந்தானம் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: கட்டடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம் - டிஜிபி சைலேந்திரபாபு தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.