ETV Bharat / state

செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை - anti corruption dept inspection in Sengundram Sub Registrar Office

திருவள்ளூர்: செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சார்பதிவாளர் அலுவலகத்தல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

author img

By

Published : Oct 29, 2020, 1:16 PM IST

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம். சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு உள்ளிட்ட பணிகளுக்கு லஞ்சம் வாங்கப்படுவதாக பல்வேறு தரப்பில் இருந்து புகார் எழுந்தது.

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறை அலுவலர்கள் செங்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். பத்திரப்பதிவு மேற்கொள்ளப்பட்ட ஆவணங்கள், அதற்கு செலுத்தப்பட்ட கட்டணம், கணக்கில் வராத பணம் உள்ளதா என பல்வேறு சோதனைகளை அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

லஞ்ச ஒழிப்பு துறை அலுவலர்கள் சோதனையால் பத்திரப்பதிவு அலுவலக ஊழியர்கள், இடைத்தரகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அலுவலர்களின் தொடர் விசாரணைக்குப் பிறகே பத்திரப்பதிவு அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட கணக்கில் வராத பணம் குறித்து தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க... சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை - ரூ. 2 லட்சம் பறிமுதல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.