ETV Bharat / state

"இத்தனை வருட அரசு பணியில் லஞ்சம் வாங்கவில்லை என யாராவது ஒருவர் கூறுங்கள். உங்கள் காலில் விழுகிறேன்"- திருவள்ளூர் ஊழல் தடுப்பு ஆய்வாளர்!

இத்தனை வருட அரசு பணியில் லஞ்சம் வாங்கவில்லை என யாராவது ஒருவர் கூறுங்கள் நான் உங்கள் காலில் விழுகிறேன் என ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரக் கூட்டத்தில், திருவள்ளூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு ஆய்வாளர் தமிழரசி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவள்ளூரில் லஞ்ச ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு!
திருவள்ளூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு ஆய்வாளர் தமிழரசி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 4, 2023, 8:04 AM IST

“ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம்

திருவள்ளூர்: ஊழல் தடுப்பு வாரத்தை முன்னிட்டு, திருவள்ளூர் நகராட்சி அலுவலக ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

நாடு முழுவதும் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் அக்டோபர் 31ஆம் தேதி முதல் நவம்பர் ஐந்தாம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம், ரயில் நிலையம், பள்ளி, கல்லூரி உள்ளிட்ட பகுதிகளில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார், லஞ்ச ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ஊழல் தடுப்பு வாரத்தை முன்னிட்டு, நேற்று (நவ. 3) திருவள்ளூர் நகராட்சி அலுவலக ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து அறிவுரைகள் கூறி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அப்போது அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் திருவள்ளூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு ஆய்வாளர் தமிழரசி பேசியதாவது, "ஊழலில் 185 நாடுகள் பட்டியலில் 85வது இடத்தில் நமது நாடு உள்ளது. அனைத்து துறைகளிலும் ஊழல் உள்ளது.

ஊழலில் முதல் இடத்தில் உள்ள துறை எது என நகராட்சி ஊழியரிடம் கேட்டதற்கு, ரிஜிஸ்டர் ஆபீஸ், ஆர்.டி.ஓ ஆபிஸ் என தெரிவிக்கின்றனர். அனைவரும் லஞ்சம் வாங்குகிறார்கள். யாராவது வாங்காமல் இருக்கிறார்களா? லஞ்சம் வாங்குவதால் பிரச்சினை வருகிறது என்று இத்தனை வருட பணியில் நான் லஞ்சம் வாங்கவில்லை என ஒருவர் தெரிவியுங்கள். நான் உங்கள் காலில் விழுகிறேன்.

பொதுமக்கள் தங்களின் தேவைக்காக நம்மிடம் வரும்போது அவர்களின் எதிர்பார்ப்பை பார்க்கிறோம். ஆள்பாதி, ஆடை பாதி பார்த்து அவர்களுக்கு மரியாதை அளிக்கிறோம். எளிமையாக வரும் பாமர மக்களுக்கு மரியாதை அளித்தால் அவர்கள் உங்களை எதிரியாக பார்க்க மாட்டார்கள். 2009ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு அதிகாரி ஒருவர், லஞ்சமாக ஒருவரிடம் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்கித் தருமாறு கேட்டுப் பெற்றுள்ளார்.

மேலும், 10 ஆயிரம் ரூபாய் அதிகமாக கொடுக்குமாறு கேட்டதால், கோபமடைந்த நபர் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார். இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது வழக்கு பதிவு செய்த நிலையில், தற்போது அவரது குடும்பம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. லஞ்சம் வாங்குவதை நிறுத்தினால் நீங்களும், உங்களது குடும்பமும், உங்களை சார்ந்தவர்களும் செழிப்பாக இருப்பார்கள்.

அரசு பணியில் இருக்கும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் லஞ்சம் பெற்று கைது செய்யப்பட்டால், வீட்டில் கொடுக்கப்பட்ட மரியாதை, வெளியில் கிடைத்த மரியாதை அத்தனையும் தலைகீழாக மாறிவிடும். மக்களின் அடிப்படைத் தேவைகளுக்காகவும், வாழ்வாதாரத்திற்காகவும் அரசு அதிகாரிகள் அலுவலகங்களை நோக்கி வரும் மக்களுக்கு, அவர்களது தேவைகளை மரியாதை அளித்து பூர்த்தி செய்தால் எந்த அவப்பெயரும், பிரச்சினையும் ஏற்படாது" என்று கூறினார்.

இதையும் படிங்க: கல்லூரி மைதானத்தில் கிடந்த 2 டன் மது பாட்டில்கள்; தூய்மை பணியில் ஈடுபட்ட முன்னாள் மாணவர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.