திருவள்ளூர் மாவட்டம் கொட்டையூரில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துவத் துறை சார்பாக முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை, ஊரக தொழில் துறை அமைச்சர் பா பெஞ்சமின், மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆகியோர் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தனர். மேலும் அங்கு வந்த கர்ப்பிணி தாய்மார்களுக்கு, அமைச்சர் பா.பெஞ்சமின் ஊட்டச்சத்து நிறைந்த பெட்டகங்களை வழங்கினார்.
இந்நிகழ்வில் அமைச்சர் பெஞ்சமின் பேசுகையில், “திருவள்ளூர் மாவட்டம் விவசாயிகள் நிறைந்த மாவட்டம் என்பதால் திருவள்ளூர். காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழை நீரை சேமிக்க ஏதுவாக பல்வேறு தடுப்பணைகள் கட்டி பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டது. அதுபோல, இன்னும் ஒருசில தடுப்பணைகளின் கட்டுமான பணிகள் முடிவடையும் நிலையில் இருக்கிறது.
முன்பெல்லாம் உடல்நிலை சரியில்லாதபோது மக்கள் நீண்ட தூரம் சென்று சிகிச்சை பெறக் கூடிய நிலை ஏற்படும். ஆனால் தற்போது கிராமங்களில் அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டது. எனவே இது மக்களின் பயன்பாட்டுக்கு ஏதுவாக திறக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத நடிகர்களுக்கு முதலமைச்சர் நாற்காலி மீது ஆசை'