ETV Bharat / state

திருவள்ளூரில் அம்பேத்கரின் 64ஆவது நினைவேந்தல் நிகழ்ச்சி!

அண்ணல் அம்பேத்கரின் 64ஆவது நினைவேந்தல் நிகிழ்ச்சி இன்று (டிச.05) திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

அம்பேத்கரின் 64வது நினைவேந்தல் நிகழ்ச்சி

author img

By

Published : Dec 5, 2020, 11:03 PM IST

பழங்குடியினர் நல முன்னேற்ற சங்கம், எஸ்சி, எஸ்டி, ஒபிசி, எம்பிசி ஆசிரியர் காப்பாளர் மற்றும் முன்னாள் இன்னாள் அரசு நலக்குழு ஆகியவற்றின் சார்பில் சட்ட மாமேதை புரட்சியாளர் அம்பேத்கரின் 64ஆவது நினைவேந்தல் நிகழ்ச்சி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (டிச.05) நடைபெற்றது.

எஸ்சி எஸ்டி நலச்சங்க தலைவர் ஜெய தென்னரசு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் பொன்னையா மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டு அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நல அலுவலர் சரவணன், ஆட்சியரின் உதவியாளர் அமீதுல்லா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அரசியல் குழு செயலாளர் நீலவானத்து நிலவன், அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் அருணன் மற்றும் நிர்வாகிகள் திருக்குமரன், அன்பழகன், சுகுணா, திருவரசு செஞ்சிசெல்வம் ஆகியோரும் கலந்துகொண்டு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இதையும் படிங்க: அரசியலமைப்பு தினத்தை கொண்டாடுவது ஏன்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.