ETV Bharat / state

திருவள்ளூர் மாவட்ட புதிய ஆட்சியராகிறார் ஆல்பி ஜான் வர்கீஸ்!

திருவள்ளூர்: மாவட்ட புதிய ஆட்சியராக ஆல்பி ஜான் வர்கீஸ் இன்று (ஜூன் 16) காலை 6.45 மணிக்கு பொறுப்பேற்றார்.

திருவள்ளூர் மாவட்ட புதிய ஆட்சியராகிறார் ஆல்பி ஜான் வர்கீஸ்!
திருவள்ளூர் மாவட்ட புதிய ஆட்சியராகிறார் ஆல்பி ஜான் வர்கீஸ்!
author img

By

Published : Jun 16, 2021, 12:28 PM IST

2020ஆம் ஆண்டு முதல் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பு வகித்துவந்த பொன்னையா தற்போது நகராட்சி நிர்வாக இயக்குநராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து சென்னை சுகாதார துணை ஆணையராகப் பொறுப்பு வகித்து வந்த ஆல்பி ஜான் வர்கீஸை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில், நேற்று (ஜூன் 15) தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் புதிதாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்ட அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் அவர்களின் பொறுப்பு, பணிகள் குறித்துச் சிறப்பு ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.

புதிய ஆட்சியராக ஆல்பி ஜான் வர்கீஸ்
இதைத்தொடர்ந்து இன்று காலை 6.45 மணிக்கு திருவள்ளூர் மாவட்டத்தின் 22ஆவது மாவட்ட ஆட்சியராக ஆல்பி ஜான் வர்கீஸ், ஆட்சியர் அலுவலகத்தில் கையெழுத்திட்டு பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இவர் 2013ஆம் ஆண்டு ஐஏஎஸ் படிப்பை முடித்து முதல் முறையாக தேவக்கோட்டை மாவட்டத்தில் துணை ஆட்சியராகப் பணியில் சேர்ந்தார்.
2013இல் ஐஏஎஸ் ஆன இவர் முதன்முறையாக மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். இவரக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துச்சாமி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வித்தியா ஆகியோர் மலர்க் கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.