ETV Bharat / state

சர்வர் கோளாறு; மருத்துவ தேர்வு எழுத முடியாமல் மாணவர்கள் தவிப்பு! - MEDICAL EXAM

திருவள்ளூர்: குன்றத்தூரில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் முதுநிலைப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வை எழுத முடியாமல் போனதால் டாக்டர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மருத்துவ மாணவர்கள் போராட்டம்
author img

By

Published : Apr 6, 2019, 11:57 PM IST

எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் முதுநிலை படிப்பிற்கான நுழைவுத்தேர்வு நேற்று நடைபெற்றது. இதற்கான தேர்வு மையம் குன்றத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்தது. இதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் மற்றும் டாக்டர்கள் கலந்து கொண்டனர். ஆனால், நீண்ட நேரமாகியும் தேர்வு எழுதத் தொடங்கவில்லை. தேர்வு நேரம் முடிந்தும் சர்வர் கோளாறு காரணமாக தேர்வு எழுத முடியாமல் போனதால், அதனை கண்டிக்கும் வகையில் தேர்வு மையம் முன்பு மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மருத்துவ மாணவர்கள் போராட்டம்

இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், இந்த தேர்வுக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து விமானம் மற்றும் பேருந்துகள் மூலமாக வந்துள்ளோம். காலை 10 மணிக்கு தொடங்கி 11 மணிக்கு முடியும் இந்த தேர்வு, சோதனை என்ற பெயரில் தங்களை 10.30 மணிக்கு மேலும் அனுமதிக்கவில்லை. இதுகுறித்து, தேர்வு மைய அதிகாரிகளிடம் கேட்டபோது சர்வர் கோளாறு ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் சரிசெய்து விடுவதாகத் தெரிவித்தனர். எனினும் அந்த குறைபாடு சரி செய்யப்படவில்லை. இந்த ஒரு மையத்தில் மட்டும் 300க்கும் மேற்பட்டோர் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மையத்தில் மீண்டும் தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Intro:குன்றத்தூரில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் முதுநிலைப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வை எழுத முடியாமல் போனதால் டாக்டர்கள் ஆர்பாட்டம்

Body:ஜேம்ஸ் மருத்துவ கல்லூரியில் முதுநிலை படிப்புக்கான நுழைவுத்தேர்வு நேற்று நடைபெற்றது இதற்கான தேர்வு மையம் குன்றத்தூரில் உள்ள தனியார் கல்லூரி அமைக்கப்பட்டிருந்தது இதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து 200 க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் மற்றும் டாக்டர்கள் கலந்து கொண்டனர் ஆனால் நீண்ட நேரம் ஆகியும் தேர்வு எழுதத் தொடங்கவில்லை தேர்வு நேரம் முடிந்தும் சர்வர் கோளாறு காரணமாக தேர்வு எழுத முடியாமல் போனதால் இதனை கண்டித்து தேர்வு மையம் முன்பு தேர்வு எழுத வந்த மாணவர்கள் ஒன்று சேர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Conclusion:இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில் இந்த தேர்வுக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து விமானம் மற்றும் பேருந்துகள் மூலமாக வந்துள்ளோம் காலை 10 மணிக்கு தொடங்கி 11 மணிக்கு முடியும் ஆனால் சோதனை என்ற பெயரில் தங்களை பத்து முப்பது மணிக்கு மேலும் அனுமதிக்கவில்லை இதுகுறித்து தேர்வு மைய அதிகாரிகள் உடன் கேட்கும்போது கணினி சர்வர் கோளாறு ஏற்பட்டுள்ளன சிறிது நேரத்தில் சரிசெய்து விடுவ தாக தெரிவித்தனர் எனினும் அந்த குறைபாடு சரி செய்யவில்லை தேர்வு நேரமான 11 மணி மேற்பட்டோர் தேர்வு எழுத முடியவில்லை மற்ற எல்லா இடங்களிலும் தேர்வுகள் நடந்து முடிந்துள்ளன இந்த ஒரு மையத்தில் மட்டும் பங்கேற்றவர் 300க்கும் அதிகமானவர்களால் தேர்வு எழுத முடியாமல் நிலைமை ஏற்பட்டுள்ளது இந்த மையத்தில் தேர்வு எழுத முடியாமல் போன மாணவர்களுக்கு மட்டும் மீண்டும் தேர்வு எழுத தயார் செய்வதாக கூறி உள்ளனர் இதனால் எங்களது எதிர்காலம் பாதிக்கப்படும் எனவே நடைபெற்ற தேர்வினை ரத்து செய்து அனைவருக்கும் மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.