திருவள்ளூர் மாவட்டத்தில் மூத்த அதிமுக உறுப்பினர், ஒன்றியத் தலைவர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த பத்து நாள்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் இன்று (மே.28) சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்தார்.
அவரது உயிரிழப்பிற்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், முன்னாள் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். கரோனா தொற்றுப் பரவலின் காரணமாக அவரது உடல் எளிமையான முறையில், அவரது சொந்த ஊரான செவ்வாய்பேட்டை பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. கட்சியின் மூத்த உறுப்பினர் உயிரிழந்திருப்பது அதிமுகவினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : கரோனா பாதிப்பு: சென்னையை முந்தியது கோயம்புத்தூர்!