ETV Bharat / state

அரசுப் பள்ளி கட்டடத்தை இடித்துத் தள்ளிய அதிமுக கவுன்சிலர் கைது

திருவள்ளூர் அருகே அனுமதியின்றி அரசுப் பள்ளி கட்டடத்தை இடித்துத் தள்ளிய வழக்கில் தேடப்பட்டுவந்த அதிமுக கவுன்சிலர் சுரேஷை திருவள்ளூர் தனிப்படை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

அரசு பள்ளி கட்டிடத்தை இடித்து தள்ளிய அதிமுக கவுன்சிலர் கைது

author img

By

Published : Jan 7, 2022, 7:27 PM IST

திருவள்ளூர்: கடம்பத்தூர் ஊராட்சிக்குள்பட்ட வெண்மனம்புதூர் கிராமத்தில் அமைந்துள்ள அரசு தொடக்கப் பள்ளி சேதமடைந்து காணப்பட்டது. அத்தகைய கட்டடத்தை இடிப்பதற்கு வட்டார வளர்ச்சி ஒன்றியக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டு இடிப்பதற்கு அனுமதியும் கொடுக்கப்பட்டிருந்தது.

தீர்மானம் இயற்றப்பட்டு இடிக்க வேண்டிய கட்டடத்திற்குப் பதிலாக, அருகிலிருந்த மாற்று பள்ளிக் கட்டடத்தை கடம்பத்தூர் இரண்டாவது வார்டு அதிமுக ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ் என்பவர் ஜேசிபி இயந்திரம் கொண்டு கடந்த டிசம்பர் 9ஆம் தேதி இடித்துத் தள்ளினார்.

அவர் மீது கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து தேடிவந்தனர்.

இந்நிலையில் தலைமறைவாக இருந்த அதிமுக கவுன்சிலர் சுரேஷை திருப்பதி கோயிலுக்குச் சென்று திரும்பிய நிலையில் திருப்பாச்சூர் பகுதியில் அவரை சுற்றிவளைத்து திருவள்ளூர் தனிப்படை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

இதையும் படிங்க: கடவுளை ஆஜர்படுத்த உத்தரவிட்ட கும்பகோணம் நீதிமன்றத்திற்கு கண்டனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.