ETV Bharat / state

அதிமுக வேட்பாளரிடம் சாமி ஆடி கோரிக்கைவைத்த பெண்

திருவள்ளூர் அதிமுக வேட்பாளர் பி.வி. ரமணா வாக்குச் சேகரிக்க கொட்டையூர் கிராமத்திற்குச் சென்றபோது பெண் ஒருவர் திடீரென சாமியாடி ஊருக்கு கோயில் கட்டித்தர வேண்டுமென கூறினார்.

ADMK CANDIDATE PV Ramana , pv ramana, பி.வி.ரமணா, ADMK CANDIDATE PV Ramana vote collection in Thiruvallur
அதிமுக வேட்பாளரிடம் சாமி ஆடி கோரிக்கை வைத்த பெண்
author img

By

Published : Apr 4, 2021, 6:41 AM IST

திருவள்ளூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சரும் தற்போதைய மாவட்டச் செயலாளருமான பி.வி. ரமணா நேற்று (ஏப். 4) கூவம், குமாரச்சேரி, கள்ளம்பேடு, கண்ணூர், கொட்டையூர், முதுகூர், ஆகிய ஊராட்சிகளில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

கொட்டையூரில் பரப்புரை மேற்கொண்டபோது, அக்கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் திடீரென சாமி ஆடினார். அப்போது அவர் இந்த ஊருக்கு கோயில் கட்டி அலங்காரம் செய்துதர வேண்டும் எனக் கோரிக்கைவைத்தார். இதைத்தொடர்ந்து வேட்பாளர் நான் வெற்றிபெற்றால் கோயில் கட்டித் தருகிறேன் என உறுதியளித்தார்.

திருவள்ளூர் அதிமுக வேட்பாளர் பி.வி. ரமணா பரப்புரை

பின்னர் அதிமுகவின் தேர்தல் அறிக்கையை விளக்கிப் பரப்புரை மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியின்போது ஒன்றியச் செயலாளர் சூரகாபுரம் சுதாகர், நிர்வாகிகள் இன்பநாதன், யுவராஜ், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில நிர்வாகி நா. வெங்கடேசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக வில்லன் நடிகர் தீனா பரப்புரை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.