திருவள்ளூர்: தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்கான வரைவு வாக்காளர் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. சட்டப்பேரவைத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக வேலை செய்துவருகின்றன.
திருவள்ளூர் மாவட்ட அதிமுக சார்பில், மாவட்ட ஆட்சியரால் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் குறித்த அவசரக் கூட்டம் முன்னாள் அமைச்சரும் மாவட்டச் செயலாளருமான பி.வி. ரமணா தலைமையில் இன்று (நவ. 17) நடந்தது.
இதில் பி.வி. ரமணா பேசும்போது, "திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நகரம், ஒன்றியம், கிளைக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தற்போது வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலைச் சரிபார்த்து, அதை வீடு வீடாகச் சென்று ஆய்வுசெய்ய வேண்டும்.
பின்னர் பட்டியலில் விடுபட்டவர்களைச் சேர்க்க வேண்டும். இறந்த நபர்கள் அல்லது வெளியூரில் வசிக்கும் நபர்களின் பெயர்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்தால் அதை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் கடம்பத்தூர் ஒன்றிய செயலாளர் சுதாகர், அவைத் தலைவர் இன்பநாதன் மாவட்ட பிரதிநிதி பாசூரன், ஊராட்சி முன்னாள் செயலாளர் மணி, திருவள்ளூர் நகரச் செயலாளர் கந்தசாமி, நகர இளைஞரணிச் செயலாளர் வேல்முருகன், இலக்கிய அணிச் செயலாளர் எத்திராஜ், பாசறை செயலாளர் ஜெயவீரன், ஐடி செயலாளர் ராஜ்குமார், மேலவைப் பிரதிநிதி விஜயகுமார், நகரப் பேரவைத் தலைவர் ஜோதி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க : காவிரி வைகை குண்டாறு இணைப்புத் திட்டம்: 7 ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதி