ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களான ஜெகதீசன் - விலாசினி தம்பதியினர் ஆவடி சேக்காட்டில் வசித்துவந்தனர். அவர்களின் வீட்டில் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சுரேஷ், புவலட்சுமி ஆகிய இருவரும் வேலைக்குச் சேர்ந்துள்ளனர்.
வேலைக்குச் சேர்ந்த ஒரே வாரத்தில் வயதான தம்பதியினரான ஜெகதீசன் - விலாசினியை கொலை செய்துவிட்டு நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு இருவரும் தப்பிச் சென்றுவிட்டனர். இவர்களைப் பிடிக்க ஆவடி காவல் துறையினர் ஆறு தனிப்படை அமைத்து தேடிவந்தனர்.
இந்நிலையில், கொலை நடந்து 11 மாதங்களுக்குப்பிறகு உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் வைத்து கொலையாளிகள் இருவரையும் ஆவடி காவல் துறையினர் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
இதன்பிறகு விமானம் மூலம் இரு கொலையாளிகளும் சென்னைக்கு அழைத்துவரப்பட்டனர். கொலையாளி சுரேஷ் மீது ஏற்கனவே ஆந்திர மாநிலத்தில் கொலை, கொள்ளை ஆகிய பிரிவுகளின் கீழ் 22 வழக்குகள் பதிவாகியிருப்பதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: காணாமல் போன பள்ளி மாணவி; இளைஞருடன் மீட்பு! - பாய்ந்தது போக்சோ