ETV Bharat / state

திருத்தணியில் வெகு விமரிசையாக நடைபெற்ற ஆடி கிருத்திகை தெப்பத் திருவிழா

திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை முதல் நாள் தெப்பத் திருவிழா வெகு விமரிசையாக நேற்று (ஜூலை 23) நடைபெற்ற நிலையில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

திருத்தணியில் வெகு விமரிசையாக நடைபெற்ற ஆடி கிருத்திகை தெப்பத் திருவிழா
திருத்தணியில் வெகு விமரிசையாக நடைபெற்ற ஆடி கிருத்திகை தெப்பத் திருவிழா
author img

By

Published : Jul 24, 2022, 9:19 AM IST

திருவள்ளூர்: திருத்தணி அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் முருகனின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாகும். இந்த கோயிலில் ஆடி கிருத்திகை விழாவின் முதல் நாளான நேற்று (ஜூலை 23) தெப்ப திருவிழாவை முன்னிட்டு மாலை 7 மணியளவில் காவடி மண்டபத்தில் இருந்து வள்ளி தெய்வானை முருகப்பெருமான் உற்சவர் தேர் வீதி வலம் வந்தனர்.

பின்னர், மலையடிவாரத்தில் உள்ள சரவணப் பொய்கை குளத்திற்கு ஊர்வலமாக சுவாமி எடுத்து சென்று அங்கு அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். முதல் நாளான நேற்று தெப்பம் மூன்று முறை சரவணப் பொய்கை குளத்தை சுற்றி வந்தது. அப்போது பக்தி இன்னிசை கச்சேரி நடைபெற்றது.

திருத்தணியில் வெகு விமரிசையாக நடைபெற்ற ஆடி கிருத்திகை தெப்பத் திருவிழா

இந்த தெப்பத் திருவிழாவில் பக்தர்கள் குளத்தின் நான்கு பக்கப் படிகளிலும் அமர்ந்து 'அரோகரா, அரோகரா' என்ற பக்தி முழக்கம் விண்ணைப் பிளக்க கோஷம் எழுப்பி, தெப்பம் வரும்போது கற்பூரம் ஏற்றி சுவாமி தரிசனம் செய்தனர். இந்த தெப்ப திருவிழாவில் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல். பி.ஜான் வர்கிஸ் ஆகியோரும் முருகப்பெருமானை தரிசித்தனர்.

தெப்ப திருவிழாவில் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.வாசர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல். பி.ஜான் வர்கிஸ் ஆகியோரும் முருகப்பெருமானை தரிசித்தனர்
பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.வாசர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல். பி.ஜான் வர்கிஸ்

இதையும் படிங்க: திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடி கிருத்திகை விழா கோலகாலமாக தொடங்கியது...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.