ETV Bharat / state

திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடி கிருத்திகை விழா கோலகாலமாக தொடங்கியது...

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆடி கிருத்திகை விழா நேற்று (ஜூலை22) முதல் கோலாகலமாக தொடங்கியது.

திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆடி கிருத்திகை விழா கோலகாலமாக தொடங்கியது.....

author img

By

Published : Jul 23, 2022, 12:11 PM IST

திருவள்ளூர்: திருத்தணி அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் முருகனின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாகும். முருகனுக்கு விசேஷமான ஆடி கிருத்திகை விழா நேற்று (ஜூலை 22) பரணி திருவிழா நடைபெற்றது. இன்று (ஜூலை23) ஆடி கிருத்திகையை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் ஆல்பின் ஜான் உத்தரவின்படி 1300-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் அப்பகுதியில் ஈடுபட்டனர்.

இதனால், திருத்தணியில் பக்தர்களின் வசதிகளுக்கு ஏற்றவாறு மூன்று சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது. மேலும் கூடுதாலாக 20 சதவீத பேருந்துகளும் இயக்கப்பட்டன. விழாவை முன்னிட்டு தூய்மை பணியாளர்கள் 450க்கும் மேற்பட்டோர் பணிகள் தொடர்ந்து ஈடுபட்டனர். 436 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. அது மட்டுமில்லாமல் ஆங்காங்கே மருத்துவ முகாம் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் 5 வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டது.

தொடர்ந்து பக்தர்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றும் தங்கள் கையில் உள்ள பைகள் மற்றும் அனைத்தும் சரியாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் காவல்துறை மூலம் எச்சரிக்கை விடுத்தது. கரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடி கிருத்திகை விழா கோலகாலமாக தொடங்கியது...

கடந்த 2 ஆண்டுகளாக ஊரடங்கு மற்றும் கரோனா தொற்று காரணமாக ஆடி கிருத்திகை தெப்ப திருவிழா நிகழ்ச்சி நடைபெறவில்லை. இதனால், இந்தாண்டு ஆடிக்கிருத்திகை தெப்ப திருவிழா நிகழ்ச்சி மிக விமர்சையாக தொடங்கியுள்ளது. இதில், நேற்று நடைபெற்ற ஆடிபரணி நிகழ்ச்சியை முன்னிட்டு அதிகளவு ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் காவடி எடுத்து வந்து மொட்டை அடித்து மலைக்கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் மூன்று மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் 'அரோகரா அரோகரா' என்ற கோஷங்களுடன் வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்தனர். திருத்தணியே இதனால் விழாக்கோலம் கொண்டுள்ளது. இன்று ஆடிக்கிருத்திகை நிகழ்ச்சி இன்னும் அதிகளவு பக்தர்கள், சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என்பதால் இன்று முதல் இரவு முழுவதும் மூன்று நாட்களுக்கு திருக்கோயில் திறந்திருக்கும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து, விழாவை முன்னிட்டு 24 மணி நேரமும் அன்னதானம் வழங்கப்படும் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். சுழற்சி முறையில் சாமி தரிசனம் செய்யும் முறை செயல்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'சந்தோஷம், நிம்மதி 10 சதவீதம் கூட இல்லை' - ஆன்மீக நிகழ்வில் ரஜினிகாந்த் பேச்சு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.