கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்தவர் சாந்தி லட்சுமி(55). கணவனை இழந்த சாந்தி லட்சுமி தனது 15 வயது மகளுடன் வசித்துவருகிறார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சின்னராசு என்ற இளைஞர் லட்சுமியின் 15 வயது மகளிடம், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, அவருடன் தனிமையில் இருந்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமடைந்தார்.
இதனையறிந்த சாந்தி லட்சுமி கடந்த 14ஆம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதனால் அந்தக் கிராமமே சோகத்தில் மூழ்கியது. இதைத் தொடர்ந்து சிறுமியைக் கர்ப்பமாக்கிய இளைஞர் மீது சிறுமியின் உறவினர் ஒருவர் கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், கவரப்பேட்டை உதவி ஆய்வாளர் சிவராஜ், சின்னராசுவைக் கைதுசெய்தார். பின்னர் அவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து, பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவரைக் காவல் துறையினர் புழல் சிறையில் அடைத்தனர்.