ETV Bharat / state

நமக்கு போன் தான் முக்கியம்: பயிற்சி ஆட்சியரின் கவனக்குறைவால் அதிர்ச்சி! - Thiruvallur District

மக்கள் பிரச்னையைத் தீர்ப்பதற்காக நடைபெற்ற அமைதிப்பேச்சு வார்த்தையின் போது, மக்களின் பிரச்னையைத் தீர்ப்பது குறித்து கவனிக்காமல் பயிற்சி ஆட்சியர் செல்போனில் மூழ்கியிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நமக்கு போன் தான் முக்கியம்: பயிற்சி ஆட்சியரின் கவனக்குறைவால் அதிர்ச்சி!

author img

By

Published : Dec 23, 2022, 6:25 PM IST

நமக்கு போன் தான் முக்கியம்: பயிற்சி ஆட்சியரின் கவனக்குறைவால் அதிர்ச்சி!

திருவள்ளூர்: கடம்பத்தூர் ஒன்றியம் வெங்கத்தூர் ஊராட்சியில் 10,000க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். தினந்தோறும் சுமார் 5 முதல் 10 டன் வரையிலான குப்பைகள் சேகரிக்கப்படும் நிலையில், அவற்றை கூவம் ஆற்றில் ஊராட்சி சார்பில் கொட்டி வந்தனர். இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின்படி குப்பைகளை கொட்டுவதற்குத் தடை செய்யப்பட்டது.

இதனை அடுத்து வெங்கத்தூர் கன்னிமா நகர் குப்பைகளை கொட்டுவதற்கு மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து சமீபத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ஒரு வாரத்திற்கும் மேலாக குப்பைகள் அகற்றப்படாமல் இருந்ததால் வெங்கத்தூர் ஊராட்சி மன்றத்தலைவர் சுனிதா பாலயோகிக்கு, மாவட்ட ஆட்சியர் ஒரு மாதத்திற்கு காசோலையில் கையெழுத்திடும் பவரை நிறுத்தி வைத்து, நேற்று கடிதம் அனுப்பப்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஊராட்சி மன்றத் தலைவர் கடிதத்தை பெறாமல் ஊராட்சி மன்றத் தலைவர் அலுவலகத்தை நூற்றுக்கும் மேற்பட்ட தனது ஆதரவாளர்களுடன் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து குப்பை கொட்டுவது தொடர்பாக சார் ஆட்சியர் மகாபாரதி, பயிற்சி ஆட்சியர் கேத்தரின் சரண்யா, வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தானம், திருவள்ளூர் வட்டாட்சியர் மதியழகன் ஆகியோர் தலைமையில் வெங்கத்தூர் பகுதி மக்கள் ஊராட்சி மன்ற நிர்வாகிகள் உடன் அமைதிப்பேச்சு வார்த்தை இன்று கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

அப்போது ஊராட்சி கிராம மக்கள் தங்கள் பகுதியில் குப்பைகளைக் கொட்டுவதால் நீர் நிலைகள் பாதிக்கப்படுவதாகவும், சுற்றியுள்ள கிராம மக்களுக்கு தொற்றுநோய் ஏற்படுவதாகவும் குற்றம்சாட்டினர். மேலும் ஊராட்சி நிர்வாகிகள் குப்பை கொட்டுவதற்கு அரசு உடனே இடத்தை ஒதுக்கித் தர வேண்டும் என இரு தரப்பினரிடையே காரசார விவாதம் நடந்து கொண்டிருந்தது.

இந்த தருணத்தில் அமைதிப்பேச்சு வார்த்தையின் முக்கியப்பங்கு வகிக்கும் பயிற்சி ஆட்சியர் கேத்தரின் சரண்யா தனது செல்போனில் வாட்ஸ்அப்பை மும்முரமாக பார்த்துக்கொண்டிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் மக்களின் பிரச்னையை எவ்வாறு தீர்ப்பது என்பதற்கான பயிற்சிக்காக வந்திருந்த பயிற்சி ஆட்சியர் மக்களின் பிரச்னையைத் தீர்ப்பது குறித்து கவனிக்காமல், கருத்து தெரிவிக்காமல், தனது செல்போனில் மும்முரமாக வாட்ஸ்அப்பில் மூழ்கி இருந்த சம்பவம், சமாதான அமைதிப்பேச்சுக்கு வந்திருந்த மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.