திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த குமாரகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் டிராக்டர் ஓட்டுநர் ரகு(40). இவருக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த பாபு என்பவரின் மகன் விக்கி(18) என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று (மே 23) இரவு ரகு வீட்டின் அருகே விக்கி தனது நண்பர்களுடன் தாயம் விளையாடிக் கொண்டிருந்தார். அதற்கு, ரகு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த விக்கி, மது அருந்திவிட்டு ரகுவிடம் தகராறில் ஈடுபட்டார்.
இதனிடையே, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், ரகுவை பலமாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். இதில் பலத்த காயமடைந்த ரகு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் ஆவேசமடைந்த கிராம மக்கள், அந்த இளைஞரின் வீட்டை அடித்து நொருக்கி, அவரது நண்பர்களையும் தாக்க முயன்றனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், பொதுமக்களை தடுத்து நிறுத்தி, இறந்தவரின் உடலை உடற்கூறாய்வுக்காக, திருத்தணி ஆரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவான விக்கியை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:பிறந்து இரு நாள்களே ஆன பெண் குழந்தை சந்தேக மரணம்; பெற்றோர் மீது வழக்குப்பதிவு