திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனையறிந்த அக்கம்பக்கத்தினர், பாலியல் தொல்லை கொடுத்த நபரைத் தாக்கி, காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
காவல் துறையினர் சம்பந்தப்பட்ட நபர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.
இதனைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள், சம்பந்தப்பட்ட நபரின் உறவினர் மீது தாக்குதல் நடத்தினர்.
இதனால் தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தாக்குதல் நடத்திய நபர்களைத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியிருந்தால் மட்டுமே ரயில்வே டிக்கெட்: பயணிகள் அதிர்ச்சி