ETV Bharat / state

திருவள்ளூரில் நடமாடும் மளிகை கடையைத் தொடங்கி வைத்த ஆட்சியர்

author img

By

Published : Jun 1, 2021, 1:20 PM IST

திருவள்ளூர் நகராட்சியில் நடமாடும் மளிகைப் பொருள்கள் தொகுப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் பொன்னையா தொடங்கி வைத்தார்.

திருவள்ளூரில் நடமாடும் மளிகை கடை- ஆட்சியர் தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் அத்தியாவசியப் பொருள்களை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் நடமாடும் மளிகைப் பொருள்கள் தொகுப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் பொன்னையா தொடங்கி வைத்தார். பத்தியால்பேட்டை பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மளிகைப் பொருள்களை பொதுமக்களுக்கு ஆட்சியர் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”தமிழ்நாட்டில் மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மாவட்டத்துக்கு உள்பட்ட அனைத்து பகுதிகளிலும் காய்கறிகள் வாகனங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தற்பொழுது மளிகைப் பொருள்களை கொண்டு செல்ல வாகனங்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. துவரம் பருப்பு, சமையல் எண்ணெய், புளி, பூண்டு, உப்பு, சர்க்கரை, மிளகாய்த்தூள், மிளகு, கடுகு, சீரகம், மஞ்சள்தூள், பெருங்காயம் அடங்கிய தொகுப்பு 400 ரூபாய், 750 ரூபாய் வீதம் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவித்தார்.

ஏற்கனவே 1,195 வாகனங்களின் மூலம் காய்கறி விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் மளிகைப் பொருள்களுக்கு என 384 வாகனங்கள் தனியாக இயக்கப்படுகிறது.

கடந்த வாரம் காய்கறி விற்பனை நாள் ஒன்றுக்கு ரூபாய் 45 லட்சம் முதல் 50 லட்சம் வரையிலும், மளிகைப் பொருள்கள் ரூபாய் 10 லட்சத்திலிருந்து 15 லட்சம் வரையிலும் விற்பனையானது. இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் அதன் விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் சந்தானம், திருவள்ளூர் வட்டாட்சியர் செந்தில்குமார், முன்னாள் கவுன்சிலர் ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: தல வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.