திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த புது கும்மிடிப்பூண்டி ரெட்டியார் தெருவைச் சேர்ந்தவர் சசிகுமார் (24). இவர் அதே பகுதியைச் சேர்ந்த கோபிகா (9) என்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் தாயார் கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் சசிகுமாரை கைதுசெய்த அனைத்து மகளிர் காவல் துறையினர் அவரை விசாரணை செய்து பின்னர் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் பரவலாக மழை: வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி