ETV Bharat / state

கிருஷ்ணா கால்வாயில் தவறி விழுந்து சிறுமி உயிரிழப்பு! - 9-year-old girl died In Krishna Canal

திருவள்ளூர்: கிருஷ்ணா கால்வாயில் தவறிவிழுந்த 9 வயது சிறுமி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணா கால்வாய்  கிருஷ்ணா கால்வாயில் தவறி விழுந்து சிறுமி உயிரிழப்பு  9-year-old girl dies after falling into Krishna canal  Krishna canal  9-year-old girl died In Krishna Canal  9 வயது சிறுமி உயிரிழப்பு
9-year-old girl died In Krishna Canal
author img

By

Published : Apr 15, 2021, 7:18 AM IST

திருவள்ளூர் மாவட்டம் தண்ணீர்குளம் பகுதியைச் சேர்ந்த தம்பதி முருகன், ரமணி. இந்தத் தம்பதிக்கு கோபிகா (9) என்ற மகள் உள்ளது. நேற்று முன்தினம் (ஏப். 13) தாய் ரமணி துணி துவைக்க கிருஷ்ணா கால்வாய் பகுதிக்கு சிறுமி கோபிகாவை அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக கோபிகா தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய் ரமணி கூச்சலிடவே அங்கிருந்தவர்கள் ஓடிவந்து சிறுமியை மீட்க முயன்றுள்ளனர். ஆனால், அதற்குள் சிறுமி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார்.

உடனடியாக இது குறித்து காவல், தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து தீயணைப்புத் துறையினர் விரைந்துவந்து சிறுமியைத் தேடும் பணியில் இரவு முழுவதும் ஈடுபட்டனர். ஆனால், சிறுமி கிடைக்கவில்லை.

இந்நிலையில், நேற்று காலை (ஏப். 14) 4 கி.மீ. தொலைவில் சிறுமி சடலமாக இருப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாகக் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

அதனடிப்படையில், அங்கு சென்ற தீயணைப்புத் துறை வீரர்கள் சிறுமியின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இச்சம்பவம் குறித்து செவ்வாய்ப்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் தாயின் கண்முன்னே மகள் தண்ணீரில் அடித்துச் சென்று உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பாடகியின் மகளுக்குப் பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் வழக்கு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.