திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த கொல்ல குப்பம் கிராமத்தில் வசிக்கும் எல்லம்மாள் மற்றும் மணி தம்பதிக்கு ஏழு வயது நிரம்பிய முருகன் என்ற மகன் உள்ளார். இவர்கள் அதே பகுதியில் கூலி வேலை செய்து வருகின்றனர்.
நேற்று (அக்-7)வழக்கம்போல வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் போது, நள்ளிரவில் கண்ணாடி விரியான் மற்றும் கட்டுவிரியன் பாம்பு அவருடைய மகனான மணியை கடித்துவிட்டு மகன் மேலே படுத்து இருந்தது.
இதனைக் கண்ட சிறுவனின் தந்தை அந்த இரண்டு பாம்பையும் அடித்து கையில் எடுத்துக் கொண்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கும் சென்றுள்ளனர். மேல் சிகிச்சைக்காக திருவள்ளுவர் தலைமை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கையில் பாம்புகளை எடுத்துக் கொண்டு தன் மகனுடன் சிகிச்சைக்கு சென்றுள்ளார். இதனைத்தொடர்ந்து சிறுவனுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க:மகனை கொன்று நரபலி கொடுத்த தந்தை கைது