திருவள்ளூர்: ராணிப்பேட்டை நெமிலி அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த முரளி என்பவரது மனைவி தேவி. இவர் மணவாளநகர் கபிலர் நகரில் உள்ள தனது மகள் அபிராமி வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் நேற்று (ஜூலை 28) இரவு சுமார் 8 மணி அளவில் மணவாளநகர் பகுதியில் உள்ள பாத்திமா துணிக்கடைக்கு துணி எடுப்பதற்காக தனது மகளுடன் சென்றுள்ளார்.
பின்னர் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்த நேரத்தில், இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள், தேவி கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு, மின்னல் வேகத்தில் தப்பி சென்றுள்ளனர்.
![தங்க சங்கிலி பெண்ணிடம் 7 சவரன் தங்க சங்கிலி பறிப்பு தங்க சங்கிலி பறிப்பு தங்க சங்கிலி கொள்ளை திருவள்ளூர் செய்திகள் குற்றச் செய்திகள் crime news thiruvallur news thirvallur news thiruvallur latest news Gold razor thiruvallur 7 razor gold theft gold theft golg chain robbery 7 razor gold chain snatching from a woman chain snatching](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12608182_trl.png)
இதையும் படிங்க: சட்ட விரோத கருக்கலைப்பு - போலி பெண் மருத்துவர் கைது