திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த அரியன்வாயல் டாஸ்மாக் கடை அருகே நேற்று (ஜன. 03) கழிவுநீர் ஊர்தி ஓட்டுநர் ராஜசேகர் என்பவரை அடையாம் தெரியாத கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டியது. அக்கம்பக்கத்தினர் அளித்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மீஞ்சூர் காவல் துறையினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த ராஜசேகரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் ராஜசேகர் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் அவர் இன்று (ஜன. 04) மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து கொலை வழக்குப்பதிவு செய்து முன்விரோதம் காரணமாக கழிவுநீர் ஊர்தி ஓட்டுநரை கொலை செய்த தேவராஜ் உள்ளிட்ட 7பேரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: விவசாய சட்டங்களுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை - குமுறும் ரிலையன்ஸ் நிறுவனம்