கரோனா தொற்று இரண்டாம் அலையின் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் தொற்றால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நேற்று (மே 16) மட்டும் ஆயிரத்து 551 நபர்களுக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 7 ஆயிரத்து 730 பேர் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் நேற்று ஆயிரத்து 752 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் நேற்று மட்டும் 10 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இதனால், கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரமாக உயர்ந்துள்ளது.
மேலும், திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனையிலுள்ள 200 ஆக்ஸிஜன் வசதிகொண்ட படுக்கைகள் தற்போது நிரம்பியுள்ளதால் புதிதாக வரும் நோயாளிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அவசர ஊர்தி, ஆட்டோக்களில் அழைத்து வரப்படும் நோயாளிகள் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக வெளியில் காத்திருந்த பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.
இந்தநிலையில், நோயாளிகளின் தேவைக்காக பாண்டூர் பகுதியிலுள்ள இந்திரா அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் 54 ஆக்ஸிஜன் வசதி கொண்ட படுக்கைகள் தயார் செய்யப்பட்டவுள்ளதால் இன்று முதல் நோயாளிகளைக் காக்கவிடாமல் விரைவில் அனுமதிக்கப்படுவார்கள் என மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மருத்துவமனையில் படுக்கைகள் இல்லாததால் ஆம்புலென்சில் காத்திருந்த நோயாளிகள்