திருவள்ளூர் நகரின் மையப்பகுதியான வீரராகவர் கோயில் பின்புறம் அமைந்துள்ளது 500 ஆண்டுகள் பழமையான அருள்மிகு பத்மாவதி தாயார் சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில். இக்கோயில் தற்போது புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இந்த விழாவில் புனித நீரைத் தெளித்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தொடக்கத்தில் பூஜைகள் நடக்க அதைத்தொடர்ந்து விஸ்வரூப தரிசனம், விசேஷ ஹோமம், மகா பூர்ண கும்பம் உள்ளிட்டவை நடைபெற்றன. காலை 10 மணியளவில் நடைபெற்ற இவ்விழாவில் பல்வேறு பகுதிகளிலிருந்து திரண்டிருந்த மக்கள் பக்திப் பரவசத்துடன் ”கோவிந்தா கோவிந்தா” என்று முழக்கமிட்டனர்.