திருத்தணி : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே ரூ.50 லட்சம் மதிப்பிலான இரண்டு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆந்திர மாநிலம் திருப்பதி பகுதியிலிருந்து தமிழ்நாடு எல்லையில் அமைந்துள்ள திருத்தணி மார்கத்தில் செம்மரக்கட்டைகள், கஞ்சா போன்ற சமூக விரோத செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
அவ்வப்போது காவலர்கள் செம்மரம், கஞ்சா பறிமுதல் செய்து வருகின்றனர். இருப்பினும் குற்றவாளிகள் தப்பி விடுகின்றன்ர். இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான தனிப் பிரிவு போலீசார் பூனிமாங்காடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது ஆந்திராவிலிருந்து கிராம பகுதிகள் மார்கத்தில் சென்ற காரை மடக்கிப் பிடித்து சோதனையிட்டனர்.
அப்போது, செம்மரக்கட்டைகள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, ரூ.50 லட்சம் மதிப்பிலான இரண்டு டன் செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபட்ட ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்த்தைச் சேர்ந்த சின்னப்பா, சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த முருகன், கனிமதுல்லா ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.
இவர்கள் கனக்காசத்திரம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு எல்லை மார்க்கத்தில் அதிகரித்து வரும் சமூக விரோத செயல்களை தடுக்கும் வகையில் இரு மாநில எல்லைப் பகுதிகளில் போலீசார் ரோந்தை தீவிரப்படுத்தினால் முழுமையாக தடுக்க முடியும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதையும் படிங்க : சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற ரூ.25 லட்சம் மதிப்புடைய செம்மரக் கட்டைகள் பறிமுதல்!