ETV Bharat / state

திருவள்ளூரில் 39 ஏரிகளின் குடிமராமத்து பணி தொடக்கம்!

author img

By

Published : May 30, 2020, 12:22 PM IST

திருவள்ளூர்: குடிமராமத்து பணி திட்டத்தின் கீழ் 39 ஏரிகளின் குடிமராமத்து பணிகள் நேற்று முதல் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.

39 ஏரிகளின் குடிமராமத்து பணி தொடக்கம்
39 ஏரிகளின் குடிமராமத்து பணி தொடக்கம்

திருவள்ளூர் மாவட்டத்தின் குடிமராமத்து பணி திட்டத்தின் கீழ் தற்போது ஏரிகள் தூர் வாரும் கரைகளை பலப்படுத்தும் பணி நேற்று (மே 29) முதல் தொடங்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட சேலை, ஏகாட்டூர், கைவண்டுர், பட்டரைபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முதல் குடிமராமத்து பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்றுவருகின்றன.

ஏரியில் மதகு கால்வாய் கட்டும் பணியை பொதுப்பணித் துறை முதன்மை பொறியாளர், திருவள்ளூர் மாவட்ட செயற்பொறியாளர் ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர்.

இதைத் தொடர்ந்து பொதுப்பணித் துறை முதன்மை பொறியாளர் கூறும்போது, “குடிமராமத்து பணி திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்டத்தில் முதல்கட்டமாக 39 ஏரிகள் தூர்வாருவதற்கான அரசாணை வெளியிடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இப்பணியில் மதகு கட்டுதல், கால்வாய் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றுவருகின்றன. தற்போது சேலையில் ஊராட்சிகள் 62 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஏரியை சீரமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் அனைத்து ஏரிகளிலும் குடிமராமத்து பணி விரைவாக முடிக்கப்படும். இதனால், விவசாயத்திற்கு வேண்டிய தண்ணீர் அதிகமாகவே கிடைக்கும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஓரிரு நாளில் குடிமராமத்து பணி தொடங்கும் - அமைச்சர் காமராஜ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.