ETV Bharat / state

மாயமான 3 வயது குழந்தை - தேடுதல் பணி தீவிரம் - Child missing near Gummidipoondi

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே மாயமான 3 வயது ஆண் குழந்தையை காவலர்கள் தீவிரமாக தேடிவருகின்றனர்.

child missing
child missing
author img

By

Published : Feb 17, 2021, 11:35 AM IST

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய ஓபுளாபுரம் பகுதியில் வசிக்கும் மணிகண்டன்- பிரியா தம்பதியின் மகன் ஜஸ்வந்த் (வயது 3). இத்தம்பதியருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் மூன்று மாத கைக்குழந்தையுடன் பிரியா வீட்டு வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது அவரது மூத்த மகன் ஜஸ்வந்த் நேற்று (பிப். 16) மாலை சுமார் 3 மணி அளவில் திடீரென மாயமானார். இதையடுத்து, அருகாமையில் உள்ள உறவினர் வீடுகளில் தேடியும் குழந்தை கிடைக்காததால் குழந்தை கடத்தப்பட்டிருக்கலாம் என்று எண்ணி கிராம இளைஞர்கள் ஒன்றிணைந்து சுற்றுவட்டார பகுதிகளில் இருசக்கர வாகனத்தின் மூலம் தேடினர். எனினும் குழந்தை கிடைக்கவில்லை.

இந்நிலையில் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து வீட்டின் அருகே இருந்த இரண்டு கிணறுகளில் 5 மின் மோட்டார்களை பயன்படுத்தி தண்ணீரை வெளியேற்றிய நிலையில் தீயணைப்புத்துறையினர் கிணற்றில் குதித்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

இரண்டு கிணறுகளில் தீயணைப்புத் துறையினர் தேடியும் குழந்தை கிடைக்காததால் தீயணைப்புத் துறையினரும் காவல்துறையினரும் தேடுதல் பணியை தீவிரப்படுத்தி வருகின்றனர். 3 வயது குழந்தை காணாமல்போன சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க: ரவுடி கொலை வழக்கில் தொடர்புடையவர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.