ETV Bharat / state

காஷ்மீரில் உயிரிழந்த துணை ராணுவப்படை வீரருக்கு 21 குண்டுகள் முழங்க அஞ்சலி! - Army soldier death

காஷ்மீரில் விபத்தில் இறந்த துணை ராணுவப்படை வீரருக்கு 21 குண்டுகள் முழங்க அஞ்சலி தமிழக அரசின் சார்பில் அமைச்சர் சா.மு. நாசர் சட்டமன்ற உறுப்பினர் சந்திரன் பங்கேற்பு.

காஷ்மீரில் விபத்தில் இறந்ததுணை ரானுவப்படை வீரருக்கு 21 குண்டுகள் முழங்க அஞ்சலி!

author img

By

Published : Apr 22, 2022, 3:48 PM IST

திருவள்ளூர்: காஷ்மீரில் பணிக்கு சென்றுகொண்டிருந்த துணை ராணுவப்படை வீரர்கள் (சி.ஆர்.பி.எஃப்) வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் தமிழ்நாட்டு வீரர் மணிபாரதி(38) உயிரிழந்தார். இவர் திருத்தணி அருகே அத்திமாஞ்சேரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர். அவரது உடல் சொந்த கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

தமிழ்நாடு அரசு சார்பில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், திருத்தணி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். சந்திரன் ஆகியோர் இறந்த மணிபாரதிக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். மேலும் துணை ராணுவப்படை சார்பில் டி.ஐ.ஜி. தினகரன், எஸ்.பி சுரேஷ்குமார், காவல் துறை சார்பில் ஏ.எஸ்.பி சாய் பிரணீத், மாவட்ட நிர்வாகம் சார்பில் வருவாய் கோட்டாட்சியர் சத்தியா ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதனை அடுத்து 21 குண்டுகள் முழங்க துணை ராணுவப்படையினர் மரியாதை செலுத்தி இறந்தவர் மீது போர்த்தப்பட்ட தேசிய கொடியை அவரது மகனிடம் வழங்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் எம்.பூபதி பள்ளிப்பட்டு தெற்கு ஒன்றியச்செயலாளர் ஜி ரவீந்திரா, திருத்தணி ஒன்றியச் செயலாளர் ஆர்த்தி ரவி உட்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

இதையும் படிங்க:ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி சண்டை - 4 பேர் காயம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.