ETV Bharat / state

திருவள்ளூர்: வேப்பம்பட்டு பகுதியில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளை! - Veppambaattu house

திருவள்ளூர்: வேப்பம்பட்டு ராமகிருஷ்ணா நகர் பகுதியில் வீடொன்றில் கொள்ளையர்கள் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டச் செய்திகள்  வேப்பம்பட்டு  Veppambaattu house  2 lacks worth jewelry theft
திருவள்ளூர்: வேப்பம்பட்டு பகுதியில் ரூ. 2லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளை
author img

By

Published : Aug 2, 2020, 7:41 PM IST

திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியில் சுரேஷ்(32), ராமகிருஷ்ணா நகர் பகுதியில் வசித்து வருகிறார். மருத்துவமனையில் நோய்வாய்ப்பட்டு அம்பத்தூரில் சிகிச்சை பெற்றுவரும் தனது தாயாரைப் பார்த்துவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

அப்போது, அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த தங்க நகைகள், வெளள்ளி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து உடனடியாக செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார்.

கொள்ளையடிக்கப்பட்ட பொருள்களின் மதிப்பு ரூ. 2 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: விசாரணைக்கு அழைத்த காவல் ஆய்வாளர்: தீக்குளித்து தற்கொலை செய்த பெயிண்டர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.