ETV Bharat / state

திருவள்ளூர் அருகே விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு! - Tiruvallur news in Tamil

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் கழிவுநீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்தபோது, விஷவாயு தாக்கியதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : May 1, 2023, 10:44 PM IST

திருவள்ளூர் அருகே விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சியில் உள்ள நேதாஜி நகர் 18வது வார்டில் இயங்கி வரும் தனியார் பள்ளியான இம்மானுவேல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இன்று (மே.1) கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக சென்ற இரண்டு பேர் கழிவுநீர் தொட்டியில் உள்ளே இருந்தபோது, விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மீஞ்சூர் பேரூராட்சி நிர்வாகத்தில் பணிபுரிந்து வரும் நிரந்தர துப்புரவுப் பணியாளர்களான பட்டலால் பகதூர் தெருவில் வசிக்கும் கோவிந்தன்(45) மற்றும் தற்காலிகப் பணியாளரான சுப்புராயலு(45) ஆகியோர் கழிவுநீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவத்திற்கு விரைந்து வந்து இருவரின் உடல்களையும் மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக கொண்டு சென்றனர். இதுகுறித்து மீஞ்சூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மேலும், இதனைத்தொடர்ந்து ஆவடி காவல்துறை ஆணையரக இணை ஆணையர் விஜயகுமார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார். இதனிடையே அந்த பள்ளியின் தாளாளரான சிமியோன் விக்டர் என்பவரை மீஞ்சூர் போலீசார் கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையின் போது, மீஞ்சூர் பேரூராட்சி நிர்வாகத்தின் உத்தரவின் பேரில், தனது பள்ளிக்கு வந்து துப்புரவுப் பணி மேற்கொண்டதாக கூறியுள்ளார். மேலும், மீஞ்சூர் பேரூராட்சி நிர்வாகித்தனர் இன்று விடுமுறை நாள் என்பதாலும் இது தொழிலாளர் தினம் என்பதாலும் எந்த ஒரு துப்புரவு பணியாளரையும் தாங்கள் பணிக்கு நியமிக்கவில்லை எனவும் சொல்வதாகத்தெரிகிறது. உழைப்பாளர் தினமான இன்று இரண்டு தொழிலாளர்கள் மரணமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மகளைத் திருமணம் கட்டித் தருவதாக நூதன மோசடி - வரதட்சணை பெற்று டாட்டா காட்டிய தந்தை கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.