இந்தோனேசியா, பங்களாதேஷ், தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா விசா மூலம் இந்தியா வந்த 129 இஸ்லாமியர்கள் டெல்லியில் நடைபெற்ற சமய மாநாட்டில் பங்கேற்று, தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக மதப் பரப்புரையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இவர்களை பிணையில் விடுவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னும், அவர்கள் அனைவரும் புழல் சிறை வளாகத்திலேயே முகாம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.
இவர்களை சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்க வலியுறுத்தி இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் நாளை மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் புழல் சிறை முகாமில் இருந்து வெளிநாடுகளை சேர்ந்த இஸ்லாமியர்கள் 129 பேர் சென்னை பெரியமேட்டில் உள்ள ஹஜ் இல்லத்திற்கு மாற்றப்பட்டனர்.